Mixture அப்பா
தன் வேலையில் மூழ்கி இருப்பார். பாசம் கிடையாது. யாருக்கும் பிரேசனம் இல்லை .
வெளிநாட்டு அப்பா
டெய்லி பேசுவார் (போனில்). கேட்டதுக்கு எல்லாம் பணம் அனுப்புவார், தேவைக்கு அதிகமாகவே. நிறைய பாசம் இருக்கிறது, கண்டம்விட்டு கண்டம் தாண்டியதால் எதையும் காட்டமுடியாது. அருகில் இல்லாததால் பிள்ளைகளின் வளர்ச்சில் பங்கேற்பு zero
Jolly அப்பா
இவருடன் இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். சிரிக்க சிரிக்க பேசுவார். நல்லா பாத்துப்பார். ஆனால் பசங்க வாழ்க்கை, முன்னேற்றம்? அது இவருக்கு தெரியாது.
கறார் பேர்வழி
உங்க பையன இவர் கிட்ட விடுங்க. அடிச்சு தொவைச்சாச்சும் Engineer ஆக்கிடுவார். பாசம் என்ன விலைன்னு கேட்பார்.
செல்வாக்கு
பெரிய பணக்காரர். கவுரவம், அந்தஸ்து, bank balance - அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள். தன்னுடைய plan முக்கியம்னு பொண்ண பாழும் கிணத்தில் தள்ளுவார் .
No choice அப்பா
நல்லது நினைப்பார். தான் நினைப்பதுவே நல்லது என முடிவோடு இருப்பார்.
Middle class அப்பா
நாம நிறைய பாத்து பழக்கப்பட்ட அப்பா. பாசம் இருக்கு - காட்டலாமா கூடாதான்னு ஒரு குழப்பம். பசங்க பரிட்சையில் நல்ல mark வாங்கினால் நல்லா settle ஆகிடுவாங்கனு நம்புறவர். அவங்க முன்னேற்றத்திற்கு வேறு எதுவும் பண்ண தெரியாது.
Super star அப்பா
பாசக்காரர். சுதந்திரமா வளப்பாரு. முன்னேற தூண்டுகோலா இருப்பார். அவளுக்கு ஒன்னு வேணும்னா ஊரையே புரட்டி போட்டு காரியத்தை சாதிப்பார்.